பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்ற நிதி விவகாரங்களில் இருந்து தாமும் சக நாடாளுமன்ற உறுப்பினரான சில்வியா லிம்மும் விலகி இருக்க வேண்டும் என்பது பற்றிய விவகாரம் எழுந்திருக்கும் நிலையில் இந்த நகர மன்றம் நடத்தும் எந்தவொரு கூட்டத்திலும் அல்லது விவாதிப்பிலும் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நகர மன்றத்தின் நிதி விவகாரங்களில் தலையிடாமல் திரு லோவும் திருவாட்டி லிம்மும் விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தாக்கல் செய்திருந்தார். அதற்கு அடுத்த நாளன்று முதல் தடவையாக அந்தத் தீர்மானம் பற்றி திரு லோ செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.
லோ தியா கியாங் விலகியிருப்பார்
1 mins read
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

