ஆபாசப் படங்களைப் பரப்பிய நால்வர் கைது

ஆபாசப் படங்களை ‘டெலிகிராம்’ உரையாடல் குழு மூலம் பரப்பியதாக நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

'Sam's lots of CB collection' எனும் அந்தக் குழுவில் ஆபாசப் படங்களைப் பரப்பிய அந்த நால்வரும் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். கணினிகள், கைபேசிகள் உள்ளிட்ட 15 மின்னியல் கருவிகளும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

அந்தக் குழுவின் இந்தச் செயல்பாடு குறித்து அக்டோபர் மாதம் 24ஆம் தேதி போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கைதான நால்வரில் மூவர் அந்தக் குழுவின் நிர்வாகிகள் என்று தெரியவந்துள்ளது. அந்தக் குழுவில் ஆபாச படங்களை விற்பதாக, அந்த 26 வயது ஆடவர் விளம்பரம் செய்ததாகக் கூறப்பட்டது.

இதுபோன்ற சட்டவிரோத உரையாடல் குழுக்களில்  இணையவேண்டாம் என போலிசார் அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.