ஜூரோங் வெஸ்ட் வீட்டில் தீ; ஆடவர் பலி

ஜூரோங் வெஸ்ட் வீட்டில் தீ; ஆடவர் பலி

1 mins read
815748cf-7ab4-49b4-adfc-ab15a985311c
தீயணைப்பு அதிகாரிகள் ஒரு படுக்கை அறை சன்னலை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். படம்: லியன்ஹ வான்பாவ் -

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரிட் 52, புளோக் 516ன் ஆறாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை தீப்பற்றியதில் 51 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்தை முதலில் அடைந்த காவலர்கள், வீட்டின் வரவேற்பறை சன்னல் வழியாக தீயணைப்புக் கருவியைக் கொண்டு நெருப்பை அணைத்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள், ஒரு படுக்கை அறை சன்னலை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.

வீட்டில் ஆடவர் ஒருவர் பேச்சு மூச்சின்றிக் கிடந்ததாகவும் அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.