ஆட்டிசம் குறைபாட்டில் கவனம் செலுத்தும் மூன்று புதிய சிறப்புப் பள்ளிகள் திறக்கப்படும்

வழக்கமான பள்ளிகளில் பயிலும் சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் வரும் ஆண்டுகளில் தங்கள் சக மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் இன்னும் அதிகமான சமூக மற்றும் உணர்வு பூர்வமான ஆதரவு பெறவிருக்கின்றனர்.

சிறப்புத் தேவையுடைய தங்கள் சக மாணவர்களைக் கவனித்துக்கொள்ளும் இரு திட்டங்களைக் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தும்.

மேலும் மனக்கோளாறுகள் போன்ற சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்பப்படுவார்கள்.

‘Circle of Friends and Facing Your Fears’ என்று அழைக்கப்படும் இந்த இரு திட்டங்கள் அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று தெரிவித்தார்.

Extra.Ordinary People எனும் சிறப்புத் தேவையுடைவர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு தேசிய பல்கலைக்கழக கலாசார மையத் தில் நடத்திய கலை நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார்.

அடுத்த சில ஆண்டுகளில் அரசாங்கத்தின் நிதி ஆதரவில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்காக மூன்று சிறப்புக் கல்விப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் அந்தப் பள்ளிகள் ஆட்டிசம் குறைபாடு உள்ள மாணவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தும் என்றும் குமாரி இந்திராணி நேற்று அறி வித்தார்.

தற்போது சிங்கப்பூரில் ஆட்டிசம் மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்காக ஆறு சிறப்புக் கல்விப் பள்ளிகள் செயல்படுகின்றன.

AWWA பள்ளி, ஈடன் பள்ளி, ரெயின்போ நிலையத்தின் மூன்று பள்ளிகள், செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் பள்ளி ஆகியவையே அந்த ஆறு பள்ளிகள்.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆறு சிறப்புக் கல்விப் பள்ளிகள் சிங்கப்பூர் குடிமக்களுக்குப் பள்ளிக் கட்டணத்தில் குறைந்தது 25 விழுக்காட்டு கழிவு கொடுக்கும்.

ஈடன் பள்ளி, கிரேஸ் ஆர்ச்சர்ட் பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஆறு பள்ளிகள் ஆட்டிசம் உள்ள மாணவர்களுக்கு தற்போது $200லிருந்து $300 வரை கட்டணம் வசூலிக்கிறது.

“இதன் மூலம் சிறப்புக் கல்வி தேவையுடைய பிள்ளைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்கள், கட்டுப்படியான கட்டணத்தில் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க வழி ஏற்படும்,” என்று குறிப்பிட்ட அமைச்சர், இதைத் தவிர அவர்களுக்கு மற்ற செலவு களும் உண்டு என்றார்.

“அரசாங்கம் சிறப்புக் கல்விக்கு கூடுதல் தொகையைச் செலவழித்து வருகிறது,” என்றும் குமாரி இந்திராணி கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்புக் கல்விக்குச் செலவிடப்பட்ட தொகை 40% அதி கரித்துள்ளது.

தற்போது சிறப்புத் தேவையு டைய மாணவர்களில் 20 விழுக்காட்டினர் 19 சிறப்புக் கல்விப்பள்ளிகளில் பயில்கிறார்கள்.

2021ஆம் ஆண்டில் தொடங் கப்படவிருக்கும் மூன்று சிறப்புக் கல்விப் பள்ளிகளில் ஒன்றை நன்கொடை அமைப்பான மெட்டா நல்வாழ்வுச் சங்கம் நடத்தும்.

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமையவிருக்கும் இந்தப் பள்ளியின் புதிய வளாகம் 2024ஆம் ஆண்டில் தயாராகிவிடும்.

இரண்டாவது பள்ளியை சிங்கப்பூர் ஆட்டிசம் வளநிலையம் நடத்தும். மூன்றாவது பள்ளியை, பாத்லைட் பள்ளி நிர்வாகம் ஏற்று நடத்தும் என்றும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!