வேகமாக பேருந்தை ஓட்டி மரணம் விளைவித்த ஓட்டுநருக்கு பத்து வாரச் சிறை

வேகமாக பேருந்தை ஓட்டி மரணம் விளைவித்த ஓட்டுநருக்கு பத்து வாரச் சிறை

2 mins read
d5a28c4d-6798-48bf-a762-dd834bf79cbe
துவாஸ் சோதனைச் சாவடிக்கு அருகே மலேசியாவில் பதிவு செய்யப் பட்ட பேருந்தைக் கவனக்குறைவாக ஓட்டி திருவாட்டி மோக் ஃபெய் சென்னின் மரணத்துக்கு ஓட்டுநர் கலைமணி முனியாண்டி காரணமாக இருந்தார். படம்: FACEBOOK/DEEJAY NESH -

துவாஸ் சோதனைச் சாவடியின் வருகை அரங்கை நோக்கிச் செல்லுகையில் பேருந்தின் வேகத்தைக் குறைக்க மலேசிய ஓட்டுநர் தவறினார்.

அதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த மாது ஒருவர் மரண மடைந்தார். 11 பயணிகள் காயம டைந்தனர்.

கலைமணி முனியாண்டி எனும் அந்த 60 வயது ஓட்டுநர் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பேருந்தை ஓட்டினார். கலைமணிக்கும் முகத்தில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.

நேற்று அவர் காணொளி இணைப்பு வழியாக மாவட்ட நீதிமன்றத்தில் தோன்றினார். அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

இக்குற்றத்துக்காக கலை மணிக்கு 10 வாரச் சிறையும் ஐந்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் எல்லா வகை வாகனங்களை ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

சுவற்றில் மோதிய வேகத்தில் 35 வயது மலேசிய மாது பேருந்தி லிருந்து தூக்கி வீசப்பட்டு, பாலத்திலிருந்து கீழே மூன்று மாடி உயரத்தில் தரையில் விழுந்தார்.

பல்வேறு காயங்களுக்கு ஆளான அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அறிவிக்கப் பட்டார்.

பேருந்திலிருந்து தூக்கி வீசப் பட்ட மற்றொரு மாதான 21 வயது எர்னி ஷெல்விக் ஷெல்டனுக்கு இடுப்பு எலும்புகள் முறிந்தன. அவர் பிழைத்துக்கொண்டார்.

மேலும் பத்து பயணிகளில் ஐவர் இங் டெங் ஃபோங் மருத்துவ மனைக்கும் மற்ற ஐவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக் கும் கொண்டு செல்லப்பட்டனர்.

கலைமணி ஓட்டிய பேருந்தில் கோளாறுகள் இல்லை என்றும் இந் தச் சம்பவத்துக்கு பேருந்து ஓட்டுநர் கலைமணியே காரணம் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.