சவூதி அரேபியாவும் குவைத்தும் சிங்கப்பூருடன் ஒத்துழைக்க விருப்பம்

சவூதி அரேபியாவும் குவைத்தும் சிங்கப்பூருடன் ஒத்துழைக்க விருப்பம்

1 mins read
cc496fb2-4762-41e4-a6ab-532ec0be217f
-

தங்கள் நாட்டு பொருளியலை பன்முகப்படுத்த சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாட்டுத் தலைவர்கள் சிங்கப்பூருடன் அணுக்கமாக ஒத்துழைக்க விரும்புவதை தம்மிடம் தெரிவித்ததாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.

சிறிய நாடாக இருந்தாலும் தன்னுடன் வளர்ச்சியில் சிறந்த வெற்றியைப் பெற்று மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிங்கப்பூரை இந்நாட்டுத் தலைவர்களும் பெருமையுடன் நோக்குகின்றனர் என்று குறிப்பிட்ட அதிபர் ஹலிமா, சவூதி அரேபிய மன்னர் சல்மான், சிங்கப்பூருடன் பொருளியல் தொடர்பிலான கூட்டு ஆணையம் அமைக்கவும் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

சவூதி அரேபியாவும் குவைத்தும் ஏற்கெனவே சிங்கப்பூருடன் எண்ணெய், எரிவாயு, நிதிச் சேவைகள், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளன.

கடந்த புதன்கிழமை சவூதி மன்னர் சல்மானுடன் நடந்த கூட்டத்தில் திருவாட்டி ஹலிமா, சிங்கப்பூருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் யாத்ரிகர்கள் வரம்பு பற்றி பேசினார். 2017ல் சிங்கப்பூருக்கு 800 ஹஜ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த ஆண்டில் அது 900க்கு உயர்த்தப்பட்டது. சிங்கப்பூருக்கான ஹஜ் இடங்களை அதிகரிக்கும் தங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு மன்னரை அவர் கேட்டுக்கொண்டார்.