வடிகால் மூடி மீது மின்ஸ்கூட்டர் ஓட்டினால் அபராதம், சிறை

நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தவிர்ப்பதற்காக மழைநீர் வடிகால் மீது போடப்பட்டுள்ள இரும்பாலான மூடி மீது அந்த வாகனத்தை ஓட்டக்கூடாது எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.

“சாக்கடை அல்லது மழைநீர் வடிகால் அமைப்பைச் சேதப்படுத்துவது கழிவுநீர், வடிகால் சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் $40,000 வரை அபராதமும் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று கழகம் தெரிவித்துள்ளது. வடிகால் மூடி மீது ஒருவர் மின்ஸ்கூட்டர் ஓட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது.