மோசடி மின்னஞ்சல்: உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை

வரி நிலுவைத்தொகை செலுத்த வேண்டியிருப்பதாகத் தனது பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

‘சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தில் இருந்து வரி விவரப்பட்டியல்’ எனும் தலைப்பில் வரும் அந்த மின்னஞ்சல் அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த மின்னஞ்சலைப் பெறுபவர்கள், சட்டரீதியிலான தண்டனையைத் தவிர்க்க உடனடியாக வரி நிலுவைத்தொகையைச் செலுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படி அதில் கூறப்பட்டிருக்கும்.

உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் சின்னமும் முகவரியும் அந்த மின்னஞ்சலில் இடம்பெற்றிருக்கும். வரி அலுவலர் என கூறிக்கொண்டு, நூர் பின் சலீம் என்பவர் அதில் கையெழுத்திட்டிருப்பார். அந்த மின்னஞ்சலைக் கவனத்தில் கொள்ளவோ, அதனுடன் கூடிய இணைப்பைப் பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என எச்சரித்து உள்ள ஆணையம், அதில் நச்சுநிரல் ஏதேனும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அந்த மின்னஞ்சலைக் கண்டபின் தங்களது தனிப்பட்ட அல்லது நிதி சம்பந்தப்பட்ட தகவல்களை எவரேனும் பகிர்ந்துகொண்டிருந்தால் உடனடியாக போலிசில் புகார் அளிக்கும்படியும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தொலைபேசி, மின்னஞ்சல் வழி மோசடி தொடர்பாக இவ்வாண்டில் ஆணையம் இதுவரை பத்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

வரி அதிகாரிகள் என்ற பெயரில், வரி நிலுவைத்தொகை செலுத்தவேண்டும் என மோசடியான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக ஆணையத்திற்குப் புகார்கள் வந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!