மறுபயனீடு எளிதாகிறது

மறுபயனீடு செய்வதை மேலும் எளிமையாக்கும் முயற்சியில் வீடுவரை சென்று மறுபயனீட்டுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் முன்னோட்டத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் வட்டாரத்தின் சில பகுதிகளில் ‘செம்ப்கார்ப்’ தொழில்துறை நிறுவனம் இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

நிறுவனத்தின் கைபேசிச் செயலி மூலம் குடியிருப்பாளர்கள், தங்களின் வீடுகளில் உள்ள மறுபயனீட்டுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான நாளையும் நேரத்தையும் தெரிவிக்கலாம். தாட்கள், வீட்டுப் பொருட்கள், துணிமணிகள், தகர டின்கள் போன்றவற்றுக்கு கிலோ கணக்கில் பணமும் தரப்படும். மறுபயனீட்டின் பலன்களை அறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் என்று நிறுவனத்தின் திரு நீல் மெக்கிரெகோர் கூறினார்.