குற்றவாளியைத் தடுத்துவைக்கும் உரிமை உண்டு; எனினும் சட்டத்தை மீறக்கூடாது

தங்களின் கண்முன் குற்றச்செயல் நிகழ்வதைப் பார்த்துக் குற்றவாளியைத் தடுத்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருந்தாலும் அதைச் செய்யும்போது எந்த சட்டத்தையும் மீறக்கூடாது என்கின்றனர் வழக்கறிஞர்கள். 

அண்மையில் லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் பெண்ணின் பாவாடைக்குள் காணொளி எடுத்த 46 வயது ஆடவரை, ஐந்து வழிப்போக்கர்கள் பிடித்து வைத்திருந்தபோது ஆடவர் உயிரிழந்தார். இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடும் ஒருவரைக் குடிமக்கள் கைது செய்ய முடியாது என வழக்கறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Loading...
Load next