பணிப்பெண்ணின் கண்களில் குத்திய பெண்ணின் தண்டனை குறைக்கப்பட்டது

தனது பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்த பெண்ணின் தண்டனையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது. கண்பார்வையை இழந்த அந்தப் பெண்ணின் நிலைக்கு 47 வயது சுஸானா போங் சிம் சுவானின் சித்ரவதை காரணமல்ல என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து அவரது சிறைத்தண்டனை எட்டு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவருக்கு முதலில் ஓராண்டு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி, பணிப்பெண் குமாரி தான் தான் சோ பயன்படுத்திய தைல எண்ணெயின் வாடை தனக்குப் பிடிக்காததால் போங்  ஆத்திரத்தில் அந்தத் தைலத்தின் கண்ணாடி போத்தலால் அவரது கண்ணத்தை அடித்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு முன்னதாக போங் தன் பணிப்பெண்ணின் கண்களில் அடிக்கடி குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டில் போங்கின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தபோது அந்தப் பணிப்பெண்ணுக்கு கண் கோளாறு எதுவும் இல்லை. ஆயினும், பணிப்பெண் கண்பார்வை இழந்ததற்கு போங்கின் சித்ரவதைதான் காரணம் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாத நிலையில்  முன்னதாக வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது என்று நீதிபதி சுவா கூறி தண்டனைக் காலத்தைக் குறைத்தார்

இப்பகுதியில் மேலும் செய்திகள்
நேற்றுக் காலை 9.50 மணிக்கு கோயில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு  நடந்தபின் மூலவர் கும்பாபிஷேகமும் மஹா தீபாராதனையும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தியபின் பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் பெற்றனர். படங்கள்: திமத்தி டேவிட்

காலை 9.50 மணிக்கு கோயில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு நடந்தபின் மூலவர் கும்பாபிஷேகமும் மஹா தீபாராதனையும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தியபின் பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் பெற்றனர். படங்கள்: திமத்தி டேவிட்

15 Dec 2019

மழையைத் தாண்டி மனநிறைவுடன் தரிசனம் பெற்ற பக்தர்கள்

அல்ஜுனிட் - ஹவ்காங் நகர மன்றத்தின் நிதி விவகாரங்களில் திருவாட்டி சில்வியா லிம்மும் திரு லோ தியா கியாங் கும் தொடர்ந்து ஈடுபடுவது குறித்து விளக்கமளிக்குமாறு அந்த நகர மன்றத்தின் தலைவர் திரு ஃபைசல் மனாப்பை தேசிய வளர்ச்சி அமைச்சு கேட்டுக்கொண்டிருந்தது. படம்: எஸ்டி

15 Dec 2019

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்ற பதிலை அமைச்சு பரிசீலிக்கிறது