அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள் பயணிகளுக்கு சேவை வழங்கும். இந்தப் பேருந்துகள் சீன நிறுவனமான யூதோங், பிஒய்டி, சிங்கப்பூரின் எஸ்டி லேண்ட் சிஸ்டம்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை இவ்வாண்டின் இறுதிக் காலாண்டிலிருந்து அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பேருந்துகளைவிட இந்த மின்சாரப் பேருந்துகளில் குறைந்த அளவு சத்தம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பேருந்துகளில் அவற்றுக்கான சின்னங்கள் பொருத்தப்படும். இந்தப் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பேருந்துகளைவிட இப்பேருந்துகள் குறைந்த அளவிலான கரியமில வாயுவை வெளிப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவையான, கூடுதல் வசதிகளைப் புதிய பேருந்து கொண்டிருக்கும்.