மனைவியின் மகளுடன் பாலுறவு; ஒப்புக்கொண்ட ஆடவர்

மனைவியின் மகளுடன் பாலுறவு; ஒப்புக்கொண்ட ஆடவர்

1 mins read
404790e7-3b48-4edd-af53-db58b13d8820
-

தமது மனைவிக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் பிறந்த வயது குறைந்த பெண்ணுடன் பாலுறவு கொண்டதை 41 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார். பெண்ணின் அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் அப்பெண்ணுடைய தாயாரின் கணவராக இன்னும் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிற்பகல் 12.30 மணி அளவில் உயர்நிலைப்பள்ளி நான்கில் பயிலும் அப்பெண்ணைப் பள்ளியிலிருந்து அந்த ஆடவர் காரில் அழைத்துச் சென்றார். ஆனால் வீட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக அட்மிரல்டி டிரைவ் வட்டாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு அவர் ஓட்டிச் சென்றார்.

அங்கு காரிலேயே அந்தப் பதின்மவயது பெண்ணுடன் அவர் பாலுறவு கொண்டார். இருவரும் காருக்குள் இருந்தவாறு பாலுறவில் ஈடுபட்டதை பிற்பகல் 2 மணி அளவில் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த போலிஸ் அதிகாரி பார்த்தார். போலிஸ் அதிகாரியைப் பார்த்ததும் இருவரும் தங்கள் ஆடைகளை உடனடியாக அணிந்துகொண்டனர்.

அந்த போலிஸ் அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்தபோது காரில் பாலுறவு கொண்டதை அந்த ஆடவர் முதலில் மறுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவருக்கும் $15,000 பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அடுத்த மாதம் 23ஆம் தேதியன்று அளிக்கப்படும்.