நிதித் தொழில்நுட்ப ஆதரவை நீட்டிக்க சிங்கப்பூர் பரிசீலனை

நிதித் தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதியாதரவை சிங்கப்பூரின் மத்திய வங்கி நீட்டிக்க பரிசீலித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த நிதி ஆதரவு இவ்வாண்டு மார்ச் மாதத் தில் முடிவடைந்தது.

நிதியாதரவு வழங்கப்பட்டதற்கு முடிவுகள் உற்சாகமளிப்பதாக இருப்பதால் பரிசீலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.புதிய நிதியாதரவுத் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை சிங்கப்பூர் நாணய ஆணையம் அடுத்த ஆண்டு அறிவிக்கக்கூடும் என்று கூறிய திரு ரவி, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் உத்தேச நிதியாதரவு நீட்டிப்பு கிடைக்கலாம் என்றும் விவரித்தார்.

முன்பு வழங்கப்பட்ட $225 மில் லியன் நிதியாதரவுத் திட்டம் புத்தாக்கத்தை வலுப்படுத்தி, புதிய நிறுவனங்களை ஈர்த்து, புதிய வேலைகளை உருவாக்கியுள்ளது என்றும் திரு ரவி கூறினார்.“கொடுக்கப்பட்ட பணம் மிகச் சிறப்பாகவும் ஆக்கபூர்வமாகவும் செலவழிக்கப்பட்டிருப்பதை இது பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிட்ட திரு ரவி, “இப்போது நம் மிடம் துடிப்பான நிதித் தொழில்நுட்பமுறை இருக்கிறது என்பதுதான் நமக்கு உற்சாகமளிக்கும் முக்கிய அம்சம்,” என்றார்.

போட்டித்தன்மையையும் புத்தாக்கத்தையும் மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகளாவிய நிதி மையங் களில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது.இதில் தனியார் துறையும் சேர்ந்துகொண்டுள்ளது. இவ் வாண்டு முதல் ஒன்பது மாதங்க ளில் அதன் முதலீட்டாளர்கள் சிங்கப்பூரின் நிதித் தொழில்நுட்பத் முதலீட்டுத் திட்டங்களில் $999.5 மில்லியனை முதலீடு செய்துள் ளன என்று எக்ஸ்சேஞ்சர் பிஎல்சி நிறுவனம் தெரிவித்தது. 

தற்போது நிதித் தொழில்நுட்பம் தொடர்பான 600க்கு மேற்பட்ட புதிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் தங்கள் வர்த்தகத்தைத் தொடங்கி உள்ளன. 

இந்த எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 50ஆக மட்டுமே இருந் தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தகவல்கள் காட் டின. “நிதித் துறையைத் தாண்டி ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 1,000 நிதித் தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கி வருகிறோம்.

“நாம் அதிகமான வேலைகளை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கும் சமயத்தில் இதுபோன்ற வேலைகளின் உருவாக்கம் நமக்கு முக்கியமானதாகவும் உற்சாகள் அளிப்பதாகவும் திகழ்கிறது,” என்றும் விளக்கினார் திரு ரவி மேனன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

09 Dec 2019

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்
ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு நிதி திரட்டு
எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் எடுத்துக்கூறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் எடுத்துக்கூறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

09 Dec 2019

எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபரிடம் விளக்கமளிக்கப்பட்டது