90 சாலை விபத்துகளில் 104 குழந்தைகள் காயம்

பன்னிரண்டு வயதுக்கும் அதற்குக் கீழும் உள்ள 104 குழந்தைகள் இவ்வாண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த 90 சாலை விபத்துகளில் காயமடைந்தனர். கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் காயமுற்ற குழந்தைகளின் எண்ணிக்கையும் அதனுடன் தொடர்புடைய விபத்துகளின் எண்ணிக்கையும் காட்டிலும் அதிகம். 2018ஆம் ஆண்டின் முதல் பாதியில் 108 சாலை விபத்துகளில் 135 குழந்தைகள் காயமடைந்தனர்.

சுகாதாரம், உள்துறை ஆகியவற்றுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் இவ்வாண்டில் காயமுற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைவடைந்திருந்தாலும் அதுபோன்ற விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். 39வது வருடாந்திர ஷெல் போக்குவரத்து விளையாட்டுகளின் இறுதிப் போட்டி தொடர்பான நிகழ்வில் பங்கேற்ற அவர், “சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சரியான நடத்தை முறைகளைக் கற்றுத்தரவும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தொடர வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அவை அவசியம்,” என்றார்.

பல்வேறு தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் சாலைப் பாதுகாப்பு பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதைச் சோதிக்க இந்த விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சாலையில் சந்திக்கும் ஆபத்துகள் குறித்து போக்குவரத்து போலிசும் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றமும் குழந்தைகளிடம் கற்பிக்கும் நடவடிக்கையைத் தொடரும் என்று திரு அம்ரின் கூறினார். இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளுக்குச் சென்று விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 23,000 மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றி போக்குவரத்து போலிஸ் விளக்கி உள்ளது. இதற்காக 190 சாலைப் பாதுகாப்பு உரை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. உரை நிகழ்ச்சிகள் தவிர மூன்று புதிய உயிரோவிய காணொளிகள் வழியாகவும் சாலைப் பாதுகாப்பு பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்வர். இந்த காணொளிகளை சாலைப் பாதுகாப்பு மன்றம் நேற்று அறிமுகம் செய்தது.

சாலையைக் கடக்க ஒதுக்கப்பட்ட பகுதிகள், சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தொடர்பான பாதுகாப்பு, ஒவ்வொருவரின் சுற்றுப்புறம் தொடர்பான விழிப்புணர்வு போன்றவற்றை அந்த காணொளிகள் விளக்குகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!