அதிகாரிகள் மீது எச்சில் துப்பியவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை

அதிகாரிகள் மீது எச்சில் துப்பியவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை

1 mins read
e718d698-b67d-4787-b5c1-ef217ac002f8
-

போலிஸ் மீது காறி உமிழ்ந்ததற்காக ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்த ஆடவர் ஒருவர் சிறை அதிகாரி மீது மீண்டும் காறி உமிழ்ந்தார். மூ சீ கியென், 48, எனப்படும் அவருக்கு நேற்று ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நின்றிருந்த சிறை அதிகாரி மீது அவர் எச்சில் துப்பியதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அரசாங்க ஊழியரின் கடமையைத் தடுத்ததற்காகவும் பரிசோதனைக்கு ரத்த மாதிரியை வழங்க மறுத்ததற்காகவும் கூடுதலாக 43 நாள் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.