அதிபர் நட்சத்திர அறநிதிக்கு இந்த ஆண்டு $10.50 மில்லியன் வெள்ளி சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் சாதனையை இது முறியடித்துள்ளது. 2018ல் இந்த அறநிதிக்கு $8.30 மில்லியன் திரண்டது. அதிபர் சவால் நிதியின்கீழ் மீடியாகார்ப் நிதி திரட்டும் வருடாந்திர நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிடுகையில் துன்பங்களைக் கடந்து வெற்றி கண்ட பலரது அனுபவங்களை அறிந்துகொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார். அதிபர் நட்சத்திர அறநிதி தொலைக்காட்சி நிகழ்வு 1994ஆம் ஆண்டு முதன்முதலாக இடம்பெற்றது.
அதிபர் நட்சத்திர அறநிதிக்கு $10.50 மில்லியன் திரண்டது
1 mins read
-

