மூப்படையும் மக்கள் தொகை: சிறப்பாக சமாளிக்கும் சிங்கப்பூர்

வேகமாக மூப்படைந்து வரும் மக்கள் தொகை பிரச்சினைகளைக் கையாளுவதில் சிங்கப்பூர் அனைத்துலக அரங்கில் சிறந்து விளங்குகிறது என்றாலும் இதில் இன்னும் செய்ய வேண்டியவை பல உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மக்கள் தொகையில் ஒருவரின் ஆயுட்காலத்தை சிங்கப்பூர் குறைத்து மதிப்பிட்டு வருகிறது என்று பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்காட் கூறினார்.

‘சிங்கப்பூருக்கான நீண்ட ஆயுள் நிகழ்ச்சி நிரல்’ எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை பேராசிரியர் ஸ்காட் எழுதியுள்ளார்.

லண்டன் வர்த்தகப் பள்ளியில் பொருளியல் துறை பேராசிரியரா கப் பணியாற்றும் அவருடன், தேசிய பல்கலைக் கழகச் சுகாதார முறையின் தலைமை நிர்வாகி பேராசிரியர் ஜான் வோங், சாவ் அற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மேரி ஆன் சாவ், புருடேன்ஷல் சிங்கப்பூர் நிறுவனத்தின் வில்ஃப் பிளாக்பர்ன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைக்குப் பங்களித்துள்ளனர்.

வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் பாதிப் பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். ஆக, நீண்ட ஆயுள் தொடர்பிலான திட் டங்களில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் 15 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வுக் கட்டுரையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

நல்ல சுகாதாரம் மற்றும் வாழ் நாள் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓய்வு வயதை மட்டும் உயர்த்துவதால், வேலையின்மை, நோய், உடற்குறை ஆகியவை அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட ஆய்வுக் குழுவினர், எந்த வயதிலும் மக்களை வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் வேலைகளை எவ்வாறு மறு வடிவமைக்கலாம் என்று நாடுகள் சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மாறிவரும் சுற்றுச்சூழலில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஆற்றல்களைப் பெருக்க ஆதரவு அளிக்க வேண்டும். நீக்குப்போக் கான வேலை நடைமுறைகள், வாழ்நாள் கற்றலை மையமாகக்கொண்டு பதவி ஓய்வைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ள மாற்று பணிப் பாதைகள் ஆகியவை ஊழியர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும்.

இதில் அரசாங்கம் பல நடவடிக் கைகளை எடுத்திருந்தாலும், தனி

யார் துறை இதில் பின் தங்கியுள்ளது என்று கூறும் ஆய்வுக் கட்டுரை அது வர்த்தக அபாயங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!