'வாடிக்கையாளரை அறிவோம்': மீண்டும் முயற்சி

'வாடிக்கையாளரை அறிவோம்': மீண்டும் முயற்சி

1 mins read
0e2cc398-65ff-42c4-b29d-d0bc6bddc0c1
-

மையப்படுத்தப்பட்ட மின்னணு 'வாடிக்கையாளரை அறிவோம்' திட்டத்தை (இ-கேஒய்சி) அறிமுகப்படுத்தும் முயற்சிகளை மீண்டும் தொடங்கவிருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்து இருக்கிறார்.

சிங்கப்பூரில் அனைத்துலகத் தீர்வுகளுக்கான வங்கியின் (பிஐஎஸ்) புத்தாக்க மைய அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் திரு ரவி மேனன் இதனைத் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்துக்கு வெளியே முதன்முறையாக புத்தாக்க மையத்தை நிறுவியிருக்கும் 'பிஐஎஸ்', முதற்கட்டமாக பொது மின்னிலக்கக் கட்டமைப்புகளிலும் தொழில்நுட்பத் தீர்வுகளுடன் ஒழுங்குமுறையாளர்களை இணைக்கும் ஒரு தளத்தின் மீதும் கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப் பட்டது.

குறிப்புச் சொற்கள்