குடிபோதையில் கத்தியை சுழற்றிய ஆடவர் கைது

குடிபோதையில் கத்தியை சுழற்றிய ஆடவர் கைது

1 mins read
c37d3c00-4616-4b26-9f44-ae2b0161a298
தோ பாயோ லோரோங் 5ல் உள்ள புளோக் 64 அருகே குடிபோதையில் கலாட்டா செய்த ஆடவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படம்: சாவ்பாவ் -

தோ பாயோ லோரோங் 5ல் உள்ள புளோக் 64 அருகே குடிபோதையில் கலாட்டா செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சமையலறைக் கத்தியால் சுற்றியிருந்தவர்களை அவர் மிரட்டியதாகவும் அருகில் காப்பிக்கடை ஒன்றில் இருந்த வாடிக்கையாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவசர அவசரமாக வெளியேறியதாகவும் த நியூ பேப்பர் தெரிவித்தது.

தகவலறிந்து வந்த போலிசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஆடவரின் வயது 55 என்று தெரிவிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்னர் ஈரச்சந்தை அருகேயும் அவர் இதேபோல நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.