ஏழு வழிபாட்டு இடங்களுக்கு நல்லிணக்க நடைப் பயணங்கள்

இந்து ஆலயத்தின் முன்புறம் பௌத்த சமயத்தின் ஜாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதைக் கடந்து கோயிலுக்குள் சென்றால் அங்கு பௌத்த மற்றும் தாவோயிச பக்தர்களையும் ஓர் இடத்தில் குவான்யின் தெய்வத்தின் உருவச் சிலையையும் பார்க்கலாம்.

வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் இந்தக் காட்சிகள் புதிதல்ல. அக்கோயிலுக்கு அருகில் குவான் இம் தோங் ஹூட் சோ சீனக் கோயிலும் உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட இவ்விரு வழிபாட்டு இடங் களையும் உள்ளடக்கி, தேசிய மரபு டைமைக் கழகம் புதிய நல்லிணக்க நடைப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

இத்திட்டத்தில் பங்கேற்கும் வருகையாளர்கள், குவீன் ஸ்திரீட், வாட்டர்லூ ஸ்திரீட், பென்கூலன் ஸ்திரீட் ஆகிய சாலைகளைக் கடந்து நல்லிணக்க நடைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இம்மாதம் 23ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை இடம்பெறும் இந்த நடைப் பயணங்களில் ஏழு வழிபாட்டு இடங்கள் சுற்றிக் காண்பிக்கப்படும். இவை அனைத்தும் சிங்கப்பூ ரின் இன, சமயக் குழுக்கள் எவ் வாறு நல்லிணக்கத்தைப் பேணு கின்றன என்றும் அருகருகே இருந்தாலும் ஒன்று மற்றதன் சமய நடைமுறைகளுக்கு மதிப்பளித்து வருகின்றன என்பதை விளக்கும் விதத்தில் நடைப் பயணங்கள் அமைந்திருக்கும் என்று விவரிக் கப்பட்டது.

நல்லிணக்க நடைப் பயணங்களில் மூன்று வழிகாட்டிப் பயணங்கள் இருக்கும். முதல் பயணத்தில் குவீன் ஸ்திரீட், வாட்டர்லூ ஸ்திரீட், பென்கூலன் ஸ்திரீட் ஆகிய சாலைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். தெலுக் ஆயர் சாலையை உள்ளடக்கிய பயணமும் சவுத் பிரிட்ஜ் ரோட்டை உள்ளடக்கிய பயணமும் கட்டங்கட்டமாக 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குவீன் ஸ்திரீட், வாட்டர்லூ ஸ்திரீட், பென்கூலன் ஸ்திரீட் ஆகிய சாலைகளில் வெவ்வேறு சமய வழிபாட்டு இடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 1800களில் கட்டப்பட்டவை.

இரண்டு மணி நேர நல்லிணக்க நடைப் பயணம் வருகையாளர்களை குவான் இம் தோங் ஹூட் சோ சீனக் கோயில், ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், மகேன் அபோப் யூத ஆலயம், குட் ஷெப்பர்ட் தேவாலயம், செயிண்ட்ஸ் பீட்டர் அண்ட பால் தேவாலயம், கும் யான் மெதடிஸ்ட் தேவாலயம், பென்கூலன் பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.

“சிங்கப்பூரின் பல இன, பல சமய மரபுடைமையைப் பற்றி சுற்றுப்பயணிகள், மாணவர்கள், புதிய குடிமக்கள் தெரிந்துகொள்ள இந்த நடைப் பயணங்கள் உதவும்,” என்றார் தேசிய மரபுடைமைக் கழகத்தின் கொள்கை, சமூகப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி திரு ஆல்வின் டான்.

“சகிப்புத்தன்மை இல்லாமை, தீவிரவாதம் ஆகியவை தலைதூக்கியுள்ள வேளையில் இன, சமய நல்லிணக்கம் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது அவசியமாகிறது,” என்றார் திரு டான்.

இந்த நடைப் பயணங்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணிக்கும் தொடங்கும். நடைப் பயணங்களுக்கான பதிவு நேற்று தொடங்கின. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர் https://peatix.com/group/6940178 எணும் இணையப் பக்கத்தில் பதிந்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!