புதிய வீடுகளின் விற்பனை குறைந்தது

சிங்கப்பூரில் புதிய வீடுகளின் விற்பனை குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,270 வீடுகள் விற்கப்பட்டன. ஆனால் அக்டோபர் மாதத்தில் 928 வீடுகள் மட்டுமே விற்பனையாயின. இது, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 27 விழுக்காடு குறைவு.

இதில் எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் சேர்க்கப்படவில்லை. நகர மறுசீரமைப்பு வாரியம் நேற்று இந்த விவரங்களை வெளியிட்டது. சிங்கப்பூரில் உரிமம் பெற்ற வீட்டு மேம்பாட்டாளர்களிடம் வாரியம் ஆய்வு மேற்கொண்டது. அப்போது புதிய வீடுகளின் விற்பனை சரிந்துள்ள விவரம் தெரியவந்தது.

எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்தால் அக்டோபரில் மொத்தம் விற்கப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கை 955. செப்டம்பரில் விற்கப்பட்ட 1,298 வீடுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் 26.4 விழுக்காடு சரிந்தது.

கடந்த மாதம் மேம்பாட்டாளர்கள் 892 வீடுகளை விற்பனைக்கு வெளியிட்டனர். இதுவும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 1,714 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 48 விழுக்காடு குறைவு.

அதே சமயத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் விற்கப்பட்ட 218 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 309 விழுக்காடு உயர்வாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

09 Dec 2019

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்
ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு நிதி திரட்டு
எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் எடுத்துக்கூறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் எடுத்துக்கூறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

09 Dec 2019

எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபரிடம் விளக்கமளிக்கப்பட்டது