இயந்திர மனித சோதனைக் கூடம்

நீ ஆன் பலதுறைத் தொழில் கல்லூரியில் இயந்திர மனித சோதனைக் கூடம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டியோங் செங் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்துடன்  அது ஐந்து ஆண்டுகால ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

நீ ஆன் பலதுறைத் தொழில் கல்லூரியும் டியோங் செங் ஹோல்டிங்சும் கட்டுமானத் துறைக்குத் தேவையான இயந்திர மனிதர்களை தயாரிக்க ஆய்வு, உருவாக்கத்தில் ஈடுபடும்.

டியோங் செங்-என்பி என்று புதிய சோதனைக் கூடத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.