சுடச் சுடச் செய்திகள்

‘சிலுசிலு, குளுகுளு’ சிங்கப்பூர்

மாறிவரும் பருவமழை, வலுவடைந்து வரும் காற்று ஆகியவற்றால் சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை இறங்கக்கூடும் என்று வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரின் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், சில நாட்களில் வெப்பநிலை சற்று உயர்ந்து 34 டிகிரி செல்சியசாகவோ, சற்று குறைந்து 23 டிகிரி செல்சியசாகவோ இருக்கலாம்.

வடகிழக்குப் பருவமழைக்காலம் என்பதால் அடுத்த இரண்டு வாரங்களில் ஒன்பது நாட்கள் வரை மதிய நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity