$7 மில்லியன் நிதித் திட்டத்தில் பயன்பெற சுமார் 1,000 உணவு விநியோக ஓட்டுநர்கள் பதிவு

நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, சுமார் 1,000 உணவு விநியோக ஓட்டுநர்கள் தங்களது மின்-ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுக்க பதிவுசெய்துள்ளனர்.

அரசாங்கமும் உணவு விநியோக நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கியுள்ள $7 மில்லியன் நிதியிலிருந்து பயன்பெறும் நோக்கில் அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தங்களது மின்-ஸ்கூட்டர்களைக் கொடுத்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக மின்சார மிதிவண்டிகள், மிதிவண்டிகள் போன்றவற்றை வாங்க விரும்பும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

சுமார் 7,000 உணவு விநியோகிப்பாளர்களைக் கொண்டிருக்கும் கிராப், தங்களது 20 விழுக்காட்டு மின்-ஸ்கூட்டர் உணவு விநியோகிப்பாளர்கள் இந்தத் திட்டத்துக்குப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டது.

சுமார் 960 மின்-ஸ்கூட்டர் உணவு விநியோகிப்பாளர்களைக் கொண்டிருக்கும் ஃபூட்பாண்டா, தமது விநியோகிப்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டது.

நேற்று தொடங்கிய இந்தப் பதிவில் டெலிவாரூ விநியோகிப்பாளர்களும் பதிவு செய்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!