தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதியதைத் தொடர்ந்து, பெண் ஓட்டுநரும் பெண் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  

52 வயது ஓட்டுநரையும் 18 வயது பயணியையும் பாதித்த அந்த விபத்து கடந்த சனிக்கிழமை (16 நவம்பர்) அதிகாலை நிகழ்ந்தது.

அந்நாள் காலை 2.27 மணிக்கு  சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்காப்பு படையினர் விபத்துக்குள்ளாகிய இருவரையும் மீட்டனர். 

பல மாடி கார் நிறுத்த பூங்காவிற்கு அருகே நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி காவல்துறையினருக்குக் அன்று காலை 2.25 மணிக்குத் தகவல் கிடைத்தது