பொய்ப் புகார்: ஐந்து நாள் சிறை

பொய்ப் புகார்: ஐந்து நாள் சிறை

1 mins read
40594d52-c27e-44d6-a61e-b75010802fcc
பொய்ப் புகார் தாக்கல் செய்ததற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசியும் இந்தோனீசியருமான ஃபிரட்டி கோஸ்மான் குவீ, 34, என்பவருக்கு நேற்று ஐந்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்தோனீசியரான ஃபிரட்டி கோஸ்மான் குவீ, 34, என்பவர், இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி, 999 எண்ணில் மூன்று தடவை அழைத்தார். அதனையடுத்து போலிஸ் அதிகாரிகள் வெஸ்ட் கோஸ்ட்டில் உள்ள வீவக வீடு ஒன்றுக்கு விரைந்தார்கள்.

அந்த ஆடவர், தன்னுடைய ஆண் காதலருக்கு எதிராக பொய்யாக புகார் தெரிவித்து இருந்தார் என்பது போலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

போலிசிடம் பொய்ப் புகார் தாக்கல் செய்ததற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசியான கோஸ்மானுக்கு நேற்று ஐந்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.