எம்ஆர்டி நிலையத்திற்கு ஓவியங்கள் வரைய ஆசையா?

எம்ஆர்டி நிலையத்திற்கு ஓவியங்கள் வரைய ஆசையா?

1 mins read
e9904afc-ebd3-4b9f-8f4b-26c8d5be80ce
-

பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்கான ஓவியக் கலைப்படைப்புகளைத் தயாரிக்க நிலப்போக்குவரத்து ஆணையம், ஓவியக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உள்ளூர் கலைஞர்களின் ஓவியக் கலைப்படைப்புகளின் வழி சிங்கப்பூரின் ரயில் நிலையங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் 'ஆர்ட் இன் டிரான்சிட்' திட்டத்தில் ஆர்வமுடையவர்களைச் சேர ஆணையம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தின் வழியாக அழைப்பு விடுத்தது.

View post on Instagram
 

வடகிழக்கு ரயில் பாதையில் அமையவிருக்கும் பொங்கோல் கோஸ்ட் நிலையத்திற்கான ஓவியராக இருக்க விரும்புவோர் தங்களுடைய விவரங்களையும் கலைப்படைப்புகளையும் அனுப்புமாறு ஆணையம் தனது பதிவில் கேட்டுக்கொண்டது.