நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

நடைபாதை, புல்தரை, வடிகால் மூடி போன்றவற்றின் மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சாலையோரத்தில் இருக்கும் நடைபாதைக் கூரையின் மீது இளையர் ஒருவர் மின்-ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும் காணொளி ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

அதில் வெகு சரளமாக கூரை மீது   மின்-ஸ்கூட்டரை ஓட்டும் அந்த நபர், நடுவில் ஓரிடத்தில் இறங்கி சிறிது தூரம் தள்ளிச் சென்று மீண்டும் அதனை ஓட்டிச் செல்வதைக் காண முடிந்தது.

மிகவும் ஆபத்தான இந்தப் பயணம் இரவு நேரத்தில் படம்பிடிக்கப்பட்ட இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வலம்வருகிறது. 

'நடைபாதையின் மீது ஓட்டக்கூடாது; புல்தரையின் மீது ஓட்டக்கூடாது; கூரையின்மீது பயணம்' என்பதைக் குறிக்கும் ஆங்கில வாசகம் அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்தது.

சாலையும் வெறிச்சோடிக் கிடக்கிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity