ஆர்ச்சர்டுக்கு அருகில் மரம் முறிந்து காரின்மீது விழுந்தது

ஆர்ச்சர்டுக்கு அருகில் மரம் முறிந்து காரின்மீது விழுந்தது

1 mins read
809f720a-3001-4118-9631-ae8fb41c92cb
சாலையின் நான்கு தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

சிங்கப்பூர் கிராண்ட் ஹயாட் ஹோட்டலுக்கு முன்புறம் ஸ்காட்ஸ் ரோட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மரம் ஒன்று முறிந்து அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த காரின்மீது விழுந்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் காரின் ஓட்டுநர் பாதுகாப்பாக காரிலிருந்து வெளியே வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

மரம் விழுந்ததன் காரணமாக அந்தப் பகுதியில் சாலையின் நான்கு தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity