11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் செயலிழந்த வெடிகுண்டு

1 mins read
07f0a677-01de-40f4-969b-3839dbf89836
50 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு நேற்று முன்தினம் 11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் அந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டது. படம்: சிங்கப்பூர் ராணுவம் -

ஜியாக் கிம் ஸ்திரீட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு நேற்று முன்தினம் 11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் அந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட அந்த வெடிகுண்டை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தெரிவித்ததை அடுத்து, வெடிகுண்டைக் கட்டுமானத் தளத்திலேயே செயலிழக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருகில் இருந்த கிட்டத்தட்ட 600 வீடுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். முதல் வெடிப்புச் சத்தம் காலை 11 மணிக்குக் கேட்டது. மாலை 4.35 மணி அளவில் வெடிகுண்டு வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

படம்: சிங்கப்பூர் ராணுவம்