என்டியுவை ஏமாற்ற சதி செய்த பெண்ணுக்கு 17 மாதச் சிறை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திடமிருந்து (என்டியு) $191,000 தொகையை ஏமாற்றிப் பறிக்க சதி செய்த பெண்ணுக்கு 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

என்டியுவின் துணை நிறுவனங்களின் முன்னாள் இயக்குநரான செங் சூன் ஹெங்குடன் சேர்ந்து 43 வயது லூயிஸ் லாய் பெய் சியன் சதி வலை பின்னியதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, தமது சதித் திட்டத்தில் தமது கணவரையும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான I-KnowHow நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான லாய் பயன்படுத்தினார். லாயின் நிறுவனத்துக்காக செங் வர்த்தக வாய்ப்புகளைத் தேடுவது, வர்த்தக முடிவுகளை எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

செங்கின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த என்டியுவின் துணை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய லாயின் நிறுவனம் அவற்றுக்கான ஏலக்குத்தகைகளில் பங்கேற்றது. லாயின் நிறுவனத்துடன் செங் நெருக்கமானவர் என்பதால் இந்தச் செயல் முறையற்றதாகும். லாயின் நிறுவனத்துடன் செங்கிற்குத் தொடர்பு இருந்தபோதிலும் அவரை அந்த நிறுவனத்தில் இயக்குநராகவோ பங்குதாரராகவோ பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட திட்டத்துக்கான வேலையைத் தமது நிறுவனம்தான் செய்தது என்று கூறி என்டியுவின் துணை நிறுவனத்திடம் லாய் மானியம் பெற்றுக்கொண்டார். ஆனால் அந்தத் திட்டத்துக்கான வேலையை செங்கிற்குக்கீழ் பணிபுரிந்த ஒருவர் செய்தார்.

என்டியுவுக்கு ஆலோசகராக லாய் செயலாற்றியபோது தமது கணவர் திரு வோங் சீ லோங்கை தமது உதவியாளராக அவர் காட்டிக்கொண்டார். செங்கிற்கு எதிரான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவருக்கு எதிராக 120 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
நேற்றுக் காலை 9.50 மணிக்கு கோயில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு  நடந்தபின் மூலவர் கும்பாபிஷேகமும் மஹா தீபாராதனையும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தியபின் பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் பெற்றனர். படங்கள்: திமத்தி டேவிட்

காலை 9.50 மணிக்கு கோயில் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு நடந்தபின் மூலவர் கும்பாபிஷேகமும் மஹா தீபாராதனையும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தியபின் பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் பெற்றனர். படங்கள்: திமத்தி டேவிட்

15 Dec 2019

மழையைத் தாண்டி மனநிறைவுடன் தரிசனம் பெற்ற பக்தர்கள்

சிங்கப்பூர் ஒருங்கிணைந்த தேவாலயப் பாடகர் குழுவினர் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வர்த்தகர்கள் இங்கு வந்த காலத்திலிருந்து நாடு அடைந்த வளர்ச்சியை விளக்கும் கதைப்பாடலை ஆங்கிலம், தமிழ், மலாய், சீன, ஜப்பானிய மொழிகளில் பாடிக் கவர்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Dec 2019

இருநூற்றாண்டு கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் சமயத் தலைவர்கள்

ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியிலிருந்து தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இயந்திர மின்னணுவியல் பயிலவிருக்கும் மாணவர் முகம்மது அமிருல் முகம்மது ஷரிஃப் (இடது), உபசரிப்பு செயல் முறை பயிலவிருக்கும் மாணவி இங் சு ஜிங் (வலது) ஆகியோரு டன் உரையாடுகிறார் ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி முதல்வர் திரு அரவிந்தன் கிருஷ்ணன் (நடுவில்). நாளை முதல் திரு அரவிந்தன் கல்வி அமைச்சின் தலைமையகத்தில் பணியாற்றுவார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Dec 2019

வகுப்பறைக்கு அப்பால் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ‘ஸ்பெக்ட்ரா’ பள்ளி