மதுக்கூடத்தில் 3 பெண்களை மானபங்கம் செய்த வழக்கறிஞருக்கு $15,000 அபராதம்

குடிபோதையில் மூன்று பெண்களை மானபங்கம் செய்ததற்காகவும் மதுபானக்கூடத்திலிருந்து தம்மை வெளியேற்ற முயன்ற மதுபானக்கூட நிர்வாகியை வசைபாடியதற்காகவும் வழக்கறிஞரான 40 வயது தேவேந்திரன் கருணாகரனுக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தம்மைப் பகைத்துக்கொண்டால் வேலையை இழக்க நேரிடும் என்று இன்ஸ் சிங்கப்பூர் சட்ட நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளியான தேவேந்திரன் மதுபானக்கூடத்தின் நிர்வாகியை மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றம் கடந்த ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

சம்பவத்தன்று தமது இரண்டு கட்சிக்காரர்களுடன் தேவேந்திரன் மதுபானக்கூடத்தில் மது அருந்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது 48 வயதான திருவாட்டி ஹெச் என்று அடையாளம் காணப்பட்ட முதல் பெண்ணை நோக்கி தேவேந்திரன் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணுக்குப் பின்னால் நின்றுகொண்ட தேவேந்திரன் அவரது முதுகைத் தடவினார்.

அங்கிருந்து நகர்ந்து சென்ற அப்பெண் தம்மைத் தொடக்கூடாது என்று தேவேந்திரனைப் பார்த்துக் கத்தினார்.

போதையில் இருந்த கருணாகரன் எதையோ உளறிவிட்டு மதுபானக்கூடத்தின் மேல் மாடிக்குச் சென்றார். 

அரை மணி நேரம் கழித்து, மதுபானக்கூடத்தின் இசைத் தொகுப்பாளருக்கான இடத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 28 வயதான திருவாட்டி பி என அறியப்படும் பெண், 30 வயதான திருவாட்டி கே என அறியப்படும் பெண் ஆகியோரை நோக்கிச் சென்ற தேவேந்திரன் கருணாகரன் அவர்களிடமும் தவறுதலாக நடந்துகொண்டார். 

அதிர்ச்சியுற்ற திருவாட்டி பி அங்கிருந்து நகர்ந்ததாகவும் திருவாட்டி கே, அங்கிருந்த 31 வயது மதுபானக்கூட ஊழியரிடம் உதவி கேட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த ஊழியர் கருணாகரனை அவ்விடத்திலிருந்து அகலுமாறு கூறினாலும் கருணாகரன் அதனைக் கண்டுகொள்ளாமல் திருவாட்டி கேயின் பக்கம் திரும்பி அவரை இழுத்துப் பிடித்து உரையாடலில் ஈடுபட்டார்.

கருணாகரனைப் பிடித்துத் தள்ளிய திருவாட்டி கேக்கு பாதுகாவலாக அந்த ஊழியர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றார்.

இதன் தொடர்பில் கருணாகரனுடன் கூடத்தின் நிர்வாகி சண்டையிட்டபோது அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அந்த இடத்திலிருந்து அகல மறுத்த  கருணாகரன், அந்த ஊழியரின் வேலைக்கு உலைவைப்பதாகவும் மிரட்டினார்.

பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்த அந்த நிர்வாகி பாதுகாவலரின் உதவியுடன் கருணாகரனை அவ்விடத்திலிருந்து வெளியேற்றினார் கூடத்தின் நிர்வாகி.

மதுபானக்கூடத்திலிருந்து வெளியேறிய பிற்கும் தகாத வார்த்தைகளால் நிர்வாகியை கருணாகரன் திட்டியதாகக் கூறப்படுகிறது. பாதுகாவல் அதிகாரி போலிசில் புகார் அளித்ததையடுத்து, கருணாகரன் கைது செய்யப்பட்டார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்த நடவடிக்கையில் கைதானோரின் வயது 22 முதல் 63 வரை. படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் படை

10 Dec 2019

சட்டவிரோத சூதாட்டம்; 24 பேர் கைது

ஆனால் நீர்க்குழாய் இருந்த அலமாரி பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்த பின்னர், நீர்க்குழாய்களில் தண்ணீரும் வரவில்லை.  படம்: லியன்ஹ வான்பாவ்

10 Dec 2019

புக்கிட் பாத்தோக் தீ விபத்தில் சிக்கிய மாது உயிரிழப்பு

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் பங்கேற்ற மொத்தம் 113 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்; இரண்டாவது நிலையில் ஐயர்லாந்து. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Dec 2019

'சத்துணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தரமான உணவு' பட்டியலில் சிங்கப்பூருக்கு மீண்டும் முதலிடம்