பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் 43 வயது ஆடவர் ஒருவர் ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியில் நேற்று (நவம்பர் 20) கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வாசகர் ஜெரி ஸ்டோம்புக்கு தாகவல் அளித்தார். ஆடவர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தையும் அது தொடர்பான காணொளியையும் அவர் அனுப்பிவைத்திருந்தார்.
கையில் பதாகைகளைப் பிடித்திருந்த அவர் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அவற்றில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த ஆடவரைச் சூழ்ந்த பலர் புகைப்படம், காணொளி எடுத்ததாக ஜெரி தெரிவித்தார்.
“திரைப்படக் காட்சிபோல அந்த ஆடவரின் கைகளில் விலங்கிட்டு போலிசார் கைது செய்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து மாலை 5 மணி அளவில் தகவல் கிடைத்ததாகவும் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் 43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணை தொடர்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity