‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு

சிங்கப்பூரில் உருவான கேரோசல் இணையத்தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளது.

நார்வே தொலைத் தொடர்பு நிறுவனமான டெலினோர் குழுமத்தின் ‘701Search’ எனும் விளம்பர இணையத்தளத்துடன் இணைய அது ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அதன் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த ஆண்டு கேரோசலின் மதிப்பு 763 மில்லியன் வெள்ளியாக இருந்தது.

இந்த இணைப்பு மூலம் கேரோசலில் டெலினோரின் பங்கு 32 விழுக்காடாக இருக்கும்.

‘701Search’ கீழ் ஏற்கெனவே மூன்று இணையத்தளங்கள் செயல்படுகின்றன.

மலேசியாவில் முடா என்ற பெயரிலும் வியட்னாமில் கோ டாட் என்ற பெயரிலும் மியன்மாரில் ஒன்கியாட் என்ற பெயரிலும் அது செயல்படுகிறது.

புதிய இணைப்பில் இந்த மூன்று இணையத் தளங்களும் தனிப்பட்ட பெயருடன் தக்க வைத்துக் கொள்ளப்படும். ஆனால் இவை மூன்றும் கேரோசலின் தலைமை நிர்வாகியான குவெக் சியூ ருய் தலைமையின் கீழ் இயங்கும்.

இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள ‘701Search’ வட்டார அலுவலகம் முழுமையாக கேரோசலுடன் இணைக்கப்படும்.

அண்மையில் கேரோசலின் பத்து விழுக்காடு பங்கை வரி விளம்பரங்களை வெளியிடும் ஒஎல்எக்ஸ் இணையத்தளம் வாங்கியது.

இதையடுத்து ‘701Search’ இணையத் தளத்துடன் கேரோசல் இணையவிருக்கிறது.

ஒஎல்எக்ஸ், டெலினோர் ஆகிய இரு நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் கேரோசல்லின் மதிப்பு இவ்வட்டாரத்தில் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு ஆசியாவில் முடா, சோ டாட், ஒன்கியாட் என ஏற்கெனவே முன்னணியில் இருக்கும் 701Search நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் இன்னும் வலுவான நிலையை எட்ட முடியும் என்று திரு குவெக் தெரிவித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் இன்டராக்டிவ் இன்டர்நேஷனலுடன் சேர்ந்து ‘701Search’ தொடங்கப்பட்டது.

2013ல் இந்த நிறுவனத்தில் நார்வே நிறுவனமான டெலினோர் சமமான பங்காளியானது.

பின்னர் 2017ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட நாளேடுகளை வெளியிடும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் தனது பங்கை 109 மில்லியன் அமெரிக்க டாலருக்கு டெலினோர் நிறுவனத்துக்கு விற்றது.

2012 ஆகஸ்டு மாதத்தில் குவெக்கும் அவரது நண்பர்கள் மார்கஸ், டான், லுகாஸ் ஙூ ஆகியோரும் சேர்ந்து கேரோசலைத் தொடங்கினர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் படித்தபோது அமெரிக்காவின் சிலிகான் வேலியில் ஒரு வருடம் வேலைப் பயிற்சியில் ஈடுபட்ட இவர்களுக்கு கேரோசல் திட்டம் உதயமானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!