$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

1 mins read
db275cf2-2850-47ec-b372-e0dd0a367c5f
கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நியூ கிரியேஷன் தேவாலயம், 'த ஸ்டார் விஸ்தா' கடைத் தொகுதியை 300 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது. தேவாலயத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தேவாலயத்தின் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு முன்பு தேவாலயத்துக்காக 'த ஸ்டார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரை' மட்டும் தமக்கு சொந்தமாக வைத்திருந்தது.

தற்போது முழு கட்டடத்தையும் அது வாங்கியுள்ளது. கேப்பிடிலாண்ட் நிறுவனத்திடமிருந்து அந்த கடைத் தொகுதியை 296 மில்லியன் வெள்ளிக்கு தேவாலயம் வாங்கியுள்ளது.