14 வயது சிறுமிக்கு போதைப் பொருள் விற்ற சிறுவன்

14 வயது சிறுமிக்கு போதைப் பொருள் விற்ற சிறுவன்

1 mins read
3b9895ce-8435-462b-9f86-cacfeb97871e
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய நான்கு நாள் அதிரடி நடவடிக்கையில் $71,000 பெறுமானமுள்ள போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -

பதினான்கு வயது சிறுமிக்கு போதைப்பொருள் விற்ற 15 வயது சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்ற அந்தச் சிறுவன் போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிறுவனுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொள்பவர் என்று சந்தேகிக்கப்படும் அந்தச் சிறுமியும் கைது செய்யப்பட்டார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய நான்கு நாள் அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 70 சந்தேக பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.

அதிரடி நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை தொடங்கி நேற்று நிறைவடைந்தது. அதிரடி நடவடிக்கையின்போது $71,000 பெறுமானமுள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிடோக், சுவா சூ காங், தெம்பனிஸ், தெலுக் பிளாங்கா, ஈசூன் உட்பட பல வட்டாரங்களில் இந்த அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity