வசதி குறைந்த சிறார்களுக்கு நிதி திரட்டுவதற்காக கடந்த வியாழக்கிழமை நடந்த ‘சைல்ட்எய்ட்’ நிதி திரட்டு நிகழ்ச்சியில் $2.12 மில்லியன் திரட்டப்பட்டது.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும், தி பிசினஸ் டைம்ஸ் நாளிதழும் இணைந்து ஆண்டுதோறும் நடத்திவரும் ‘சைல்ட்எய்ட்’ நிதி திரட்டு நிகழ்ச்சி நேற்று முன் தினம் 15ஆவது முறையாக நடந்தேறியது.
இந்த நிதி, எஸ்டி பள்ளி கைச்செலவு நிதி மற்றும் பிசினஸ் டைம்ஸ் ‘பட்டிங் ஆர்ட்டிஸ்ட்’ நிதி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.
இவ்வாண்டு திரட்டப்பட்ட நிதியுடன் கடந்த 15 ஆண்டுகளில் மொத்தமாக $22.71 மில்லியன் நிதி நன்கொடைக்காகத் திரட்டப்பட்டு உள்ளது.
வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் படைத்த 132 கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ் நிகழ்ச்சியில் நான்கு காசோலை
களைப் பெற்றுக்கொண்டார்.
முக்கிய ஆதரவாளர்களான யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, $1 மில்லியனும் சிட்டிபேங்க் $652,000 நிதியையும் நன்கொடையாக வழங்கின. எம்எச்சி ஆசியா குழுமமும் ($100,000) சிங்கப்பூர் நெகிழி துறைச் சங்கமும் ($138,000) காசோலைகள் வழங்கிய மற்ற இரு அமைப்புகள்.
எஸ்டி பள்ளி கைச்செலவு நிதி வசதி குறைந்த சிறார்களுக்கு கைக்காசு வழங்குகிறது. ‘பட்டிங் ஆர்ட்டிஸ்ட்’ நிதி மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களின், இளையர்களின் கலைத்துறை சார்ந்த பயிற்சிகளுக்கு உதவும். வியாழக்கிழமை நடந்த கலைநிகழ்ச்சியை 1,600க்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
புதன், வியாழன் என இரு நாட்களுக்கு இந்நிகழ்ச்சி எஸ்பிளனேட் அரங்கில் நடந்தேறியது.
சைனா டைப்பிங் இன்ஷூரன்ஸ், சன்டொரி பெவெரேஜ் அண்ட் ஃபுட் ஆசியா, டோட் போர்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியின் தங்க ஆதரவாளர்கள். கிஸ்92 அதிகாரபூர்வ வானொலி.
நிகழ்ச்சி டிக் லீ ஆசியாவால் தயாரிக்கப்பட்டது, கொஸ்மொபுரொஃப், அன்யூசுவல் புரொடக்ஷன் ஆகியவை நிகழ்ச்சியின் கலை நிகழ்ச்சியின் பங்காளிகள்.
இடத்திற்கு சிங்கப்பூர் சீன கலாசார நிலையமும் தி பவிலியனும் ஆதரவு வழங்கியுள்ளனர்.