இணையம் மூலம் வங்கியை ஏமாற்றி கொள்ளையடித்த குற்றத்துடன் தொடர்புடைய 62 வயது ஆம்பிரோஸ் டியோனிசியசுக்கு எதிராகக் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றச்சாட்டு பதிவாகி இருந்தது.
இந்தக் குற்றச்சாட்டை மேல்முறையீடு நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
இருப்பினும், அவர் புரிந்த மற்ற குற்றங்களுக்காக அவருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனை தொடர்கிறது.
டியோனிசியஸ் மீது ஊழல், போதைப் பொருள் கடத்தலும் மற்ற மோசமான குற்றங்களும் என்ற குற்றப் பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மற்றவர்கள் கொள்ளையடித்த பணத்தை நல்ல பணமாக்கியவர் மீது அவருக்கு எதிராக முதலில் பயன்படுத்தியிருந்த குற்றச்சாட்டைப் பயன்படுத்த முடியாது என்று மேல்முறையீடு நிதிமன்றம் தெரிவித்தது.
டியோனிசியஸ் தொடர்புடைய குற்றத்துடன் பெரிய தொகை சம்பந்தப்பட்டிருப்பதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அளவுக்கு அதிகமானதல்ல என்று நீதிபதி கூறினார்.
செயல்பாட்டில் இல்லாத சிங்கப்பூர் நிறுவனமான ஹயாஷி கன்ஸ்டிரக்ஷன் அண்ட் எஞ்ஜினி யரிங்கின் விற்பனை இயக்குநராக இருந்த டியோனிசியஸ், ஆர்பிசி ராயல் வங்கியை ஏமாற்றி அதனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட $4.4 மில்லியனை 2013ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டார். வங்கியை அடையாளம் தெரியாத மோசடிக்காரர்கள் ஏமாற்றினர்.
கிடைத்த பணத்தை டியோனிசியஸ் மலேசியாவில் உள்ள வென்டி சியோங் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.