பூன் லே பிளேஸ்: சண்டையில் ஈடுபட்ட ஒருவர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

பூன் லே பிளேஸ்: சண்டையில் ஈடுபட்ட ஒருவர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

1 mins read
aaaae401-0c39-4946-b8a2-ba32d45f7a3f
சண்டையில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தியாகக் கூறப்பட்டது. படம்: ஸ்டோம்ப் -

பூன் லே ஷாப்பிங் சென்டரில் சண்டையிட்டு காயமடைந்த இருவரை போலிசார் கைது செய்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) பூன் லே பிளேசில் நிகழ்ந்த சண்டையைப் பற்றி அன்றைய தினம் பிற்பகல் 3.06 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

சண்டையில் ஈடுபட்டு காயமடைந்த 65 வயது ஆடவர் சுயநினைவுடனும், 64 வயது ஆடவர் சுயநினைவின்றியும் இங் தென் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் தொடர்பில் இருவரையும் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பகுதியில் வசிக்கும் இவா எனும் 'ஸ்டோம்ப்' வாசகர் புகைப்படங்களுடன் செய்தியைத் தெரிவித்தார்.

சண்டையிட்ட இருவரில் ஒருவர் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தியதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தக் கடைத்தொகுதியில் தினமும் காலையிலிருந்தே புகைபிடித்துக்கொண்டும், மது அருந்திக்கொண்டும் இருக்கும் பலர் சண்டையில் ஈடுபடுவது புதிதல்ல என்று குறிப்பிட்ட திரு இவா, "அது பொதுமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் பல வழிகளில் தொல்லையாக இருக்கிறது," என்றார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்