பொது இடங்களில் இருநூற்றாண்டு விழா கலைப்பொருட்கள்

இருநூற்றாண்டு விழா கலைப்பொருட்கள் பொது இடங்களில் வைக்கப்படும் என்றும் அதன் விளைவாக பொதுமக்கள் அவற்றை எளிதில் பார்த்து மகிழலாம் என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே மூன்று இருநூற்றாண்டு விழா கலைப்பொருட்களைப் பொது இடங்களில் வைக்க அரசாங்கம் தீர்மனித்ததாக அவர் கூறினார்.

பொங்கோல் மால் கடைத்தொகுதியில் டுவார்சிக் சிங் சோர் லெங்கின் படைப்பான ஆறு மீட்டர் உயரமுள்ள ‘தி ஃபை ஸ்டோன்ஸ்’ நேற்று வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

பொங்கோல் மாலில் ‘ஃபை ஸ்டோன்ஸ்’ காட்சிக்கு வைக்கப்பட்ட இறுதி நாளில் அங்கு சென்றிருந்த திரு ஹெங், இந்தக் கலைப்பொருட்களைப் பார்க்கும் சிங்கப்பூரர்களுக்கு அத்தகைய படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் ஏற்படக்கூடும் என்று தெரிவித்தார்.

இன்றிலிருந்து அந்த பத்து ஃபைவ் ஸ்டோன்ஸ்களும் தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஜூரோங் போன்ற வட்டாரங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அடுத்த ஜனவரி மாதம் பாடாங்கில் நடைபெற இருக்கும் சிங்கப்பூர் கலை விழாவில் அவை காட்சிக்கு வைக்கப்படும்.

ஜூரோங் லேக் கார்டன்சில் வைக்கப்பட்டுள்ள திரு ராபர்ட் சாவ் செதுக்கிய ‘தி டைம் ஃட்ரீ’ சிற்பமும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திரு ஃபரிஸ்மான் ஃபஜாரி செதுக்கிய நகிரோசிங் ஷோர்ஸ்ந சிற்பமும் மற்ற இரு கலைப்பொருட்களாகும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!