ஹோட்டல் அறையில் பதின்ம வயது பெண் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் இறுதியில் வம்பு தும்புமாக முடிந்தது.
ஷேரொனியா பருந்தூ என்ற அந்தப் பெண், தம்முடன் செந்தோசா கோவின் ‘டபிள்யூ சிங்கப்பூர்’ ஹோட்டலுக்கு எடுத்துச்சென்ற வாசனை பெளடரை போதைப்பொருள் என ஹோட்டல் பணியாளர்கள் சந்தேகித்ததாக அவர் நேற்று இன்ஸ்டகிராமில் தெரிவித்தார்.
இம்மாதம் 10ஆம் தேதி காலை 9.30க்கு ஹோட்டல் அறை ஒன்றுக்குள் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் வெள்ளை பௌடரை குறித்து புகார் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். அந்த ஹோட்டல் அறையில் 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட இருந்த ஓர் ஆடவரும் மூன்று பெண்களும் போதைப்பொருள் தங்கள்வசம் வைத்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அதிகாலை 1.43 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக போலிசார் கூறினர்.