தெமாசிக் நிறுவனத்திற்குச் சொந்தமான நகர, உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சர்பானா ஜூரோங், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்டுப்படியான விலையிலான குடியிருப்புத் திட்டத்தை (affordable housing project) செயல்படுத்தவுள்ளது.
குஜராத் வீடமைப்புக் கழகம் இந்தத் திட்டத்தை சர்பானாவுக்கு வழங்கியுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்பகுதிகளிலுள்ள 12 இடங்களில் சுமார் 15,000 வீடுகளை மேம்படுத்தும் பணிகளை சர்பானா ஜூரோங் மேற்கொண்டுள்ளது.
“குஜராத்தின் பொது வீடமைப்பு மேலும் துடிப்பாகவும் நிலைத்தன்மையாகவும் வாழ்வதற்கு ஏற்றதாகவும் இருக்கச் செய்ய இந்தத் திட்டம் பொது வீடமைப்பின் சிங்கப்பூரின் சிறந்த வழிமுறைகளை உள்ளடக்கும்,” என்று சர்பானா ஜூரோங் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டது.