ரயிலில் முறைத்துப் பார்த்த சம்பவம்: ஆடவருக்கு அபராதம்

ரயிலில் முறைத்துப் பார்த்த சம்பவம்: ஆடவருக்கு அபராதம்

1 mins read

எம்ஆர்டி ரயிலில் சென்ற ஆண்டு நவம்பரில் இளையர் ஒருவர் முறைத்துப் பார்த்ததாகக் கூறி அவரோடு சண்டையிட்ட ஆடவருக்கு அதிகபட்ச அபராதமான $5,000 விதிக்கப்பட்டுள்ளது. முகம்மது ஃபாரிட் ஜலீல், 26, என்பவர் இர்ஃபான் அகிட் கமிஸ், 17, என்பவரை முதலில் தாக்கினார். ஊட்ரம் பார்க் நிலையத்தில் ரயில் ஏறிய ஃபாரிட், தானா மேராவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இர்ஃபான் தம்மைப் பார்த்து முறைப்பதாகக் கூறி அவரிடம் சண்டையிடத் தொடங்கியது அடிதடியில் முடிந்தது.