சுல்தான் பள்ளிவாசலில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

சுல்தான் பள்ளிவாசலில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

1 mins read
954732bc-8fda-484a-8c0f-e1d64b1357e8
சிங்கப்பூரில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில் இத்தகைய பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி நடத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் படை -
multi-img1 of 3

கம்போங் கிளாம் பகுதியில் உள்ள சுல்தான் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (நவம்பர் 24) பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி நடைபெற்றது.

பயங்கரவாதத்தைக் கையாள முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த பாவனைப் பயிற்சி நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில் இத்தகைய பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி நடத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சுல்தான் பள்ளிவாசல் ஆகியவை நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் இந்த விவரத்தைத் தெரிவித்தன.

இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்களில் இவ்வாண்டு ஏப்ரலில் ஈஸ்டர் தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity