வசதி குறைந்தோருக்கு மெடிஃபண்ட் மூலம் $156.5 மி.

வசதி குறைந்த நோயாளிகளுக்குக் கடந்த நிதி ஆண்டில் மெடிஃபண்ட், மெடிஃபண்ட் சில்வர் ஆகிய திட்டங்களின் மூலம் அரசாங்கம் $156.5 மில்லியன் செலவழித்தது.

2017ஆம் ஆண்டைவிட இது $25 மில்லியன் அதிகம்.

மெடிஃபண்ட் நிதி உதவி பெற சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 99.9 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று கட்டணக் கழிவுக்குப் பிறகும் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் சிரமப்படுவோருக்கு உதவியாக மெடிஃபண்ட், மெடிஃபண்ட் சில்வர் ஆகிய திட்டங்களை அரசாங்கம் வழங்குகிறது.

மெடிஃபண்ட் நிதி 1993ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதையடுத்து 2007ஆம் ஆண்டில் மெடிஃபண்ட் சிலவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் மூத்த சிங்கப்பூரர்களுக்காக தொடங்கப்பட்டது.

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவி செய்ய மெடிஃபண்ட் ஜூனியர் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டில் கூடுதல் நிதி வழங்கப்பட்டபோதிலும் மெடிஃபண்ட், மெடிஃபண்ட் சில்வர் ஆகிய இரண்டு திட்டங்களில் உள்ள தொகை $3 மில்லியனிலிருந்து $4.65 மில்லியன் வரை உயர்ந்தது.

இரண்டு நிதிகளுக்காகவும் அரசாங்கம் $4.5 மில்லியன் வழங்கியது. இந்த நிதித் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட தொகையில் பெரும்பாலானவை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கிடைத்தது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை $29.3 மில்லியன் பெற்றது.

அடுத்ததாக டான் டோக் செங் மருத்துவமனைக்கு $24.5 மில்லியன் கிடைத்தது. வசதி குறைந்த நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரென் சி சமூக மருத்துவமனைக்கு $6.75 மில்லியனும் சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைகளுக்கு $3.5 மில்லியனும் வழங்கப்பட்டது.

பலதுறை மருந்தகங்களில் சிகிச்சை பெறும் வசதி குறைந்த நோயாளிகளுக்காக $6.57 மில்லியன் வழங்கப்பட்டது.

வசதி குறைந்தோருக்கான மருத்துவம் தொடர்பான சேவைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவை ஏறத்தாழ $4 மில்லியன் வழங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!