சிங்கப்பூரின் உற்பத்தித் துறை எதிர்பாரா வகையில் கடந்த மாதம் நான்கு விழுக்காடு வளர்ச்சி கண்டது.
இந்தத் தகவலைப் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் நேற்று வெளியிட்டது. மின்னணுவியல் துறை வளர்ச்சி கண்டதும் மருந்துகள் உற்பத்தி அதிகரித்ததும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
உயிரியல்மருத்துவத் துறை உற்பத்தியைச் சேர்க்காமல் உற்பத்தித் துறை 0.2 விழுக்காடு உயர்ந்தது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் உற்பத்தித் துறை 1.4 விழுக்காடு வீழ்ச்சி காணும் என்று பொருளியல்
நிபுணர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக உற்பத்தித் துறை வளர்ச்சி கண்டது.
உயிரியல்மருத்துவத் துறை விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அதன் உற்பத்தி 24 விழுக்காடு அதிகரித்தது. மருந்துகள் உற்பத்தி 29.6 விழுக்காடு கூடியது. மருத்துவச் சாதனங்களுக்கான ஏற்றுமதி அதிகரித்ததால் மருத்துவத் தொழில்நுட்பத் துறை 13.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது.