பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி அனுமதியைத் திருத்தியமைக்கும் திட்டத்தை மலேசியா அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
புதிய விதிமுறைகளால் பழங்கள், காய்கறிகளை சிங்கப்பூ
ருக்கு ஏற்றுமதி செய்வதன் செலவுகள் பெருமளவில் கூடிவிடும் என்று அதன் விநியோகிப்பாளர்கள் புகார் செய்ததால் இந்த முடிவை மலேசிய அரசாங்கம் எடுத்துள்ளது.
மலேசியாவின் தனிமைப்படுத் துதல் மற்றும் சோதனை சேவை கள் இலாகா, ஏற்றுமதி அனுமதி பெறவிருக்கும் பொருட்களின் எண்ணிக்கையை 50லிருந்து பத் துக்குக் குறைத்தது.
அதனால் பழங்கள், காய்கறி விநியோகிப்பாளர்கள் பத்துக்கு மேற்பட்ட பொருட்களுக்குத் தனித்தனி அனுமதி பெற விண் ணப்பிக்க வேண்டும் என்றும் இது தங்கள் செலவைப் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் ஜோகூர் பழங்கள், காய்கறி வர்த்தகர்கள் குரல் எழுப்பினர்.
இந்தப் புதிய விதிமுறையால் தங்கள் செலவு 700% வரை அதிகரிக்கக்கூடும் என்று அவர் கள் கவலை தெரிவித்தனர்.
“வர்த்தகர்கள் ஏற்றுமதி செய் யும் தங்கள் பொருட்கள் பற்றி சரியான தகவலைக் கொடுப்ப தில்லை என்றும் தற்போதைய முறையை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார் கள் என்றும் மலேசியாவின் வேளாண் துணை அமைச்சர் சிம் ஸீ ஸின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சி டம் தெரிவித்தார்.
“புதிய விதிமுறைகளால் வர்த்தகர்களின் செலவுகள் அதி கரிக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அது 700 மடங்கு அதி கரிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது,” என்றும் அவர் விவரித்தார்.
அமைச்சரின் கருத்தை ஆமோ தித்த மலேசிய காய்கறி விவசாயி கள் சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு டான் சோ டியோக், “செலவு அதிகரிப்பு சுமார் 50% இருக்கலாம். அது எந்தப் பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என் பதைப் பொறுத்துள்ளது,” என்று விளக்கினார்.