கறுப்பு வெள்ளிக்கிழமை விற்பனையில் பங்கேற்று பெரும் சலுகைகளைப் பெற வாடிக்கையாளர்கள் பல்வேறு கடைத் தொகுதிகளில் நேற்று முதல் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கி விட்டனர். இந்த விற்பனை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி இன்று பின்னிரவு 1 மணிக்கு முடிவுறும்.
இந்த வருடாந்திர விற்பனை அமெரிக்காவில்தான் முதலில் தொடங்கப்பட்டது. அது கடந்த ஆண்டுகளாக சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கி, புகழ்பெற்ற விற்பனை நாளாக உருவெடுத்துவிட்டது.
ராபின்சன்ஸ், கோர்ட்ஸ், டேங்ஸ், மெட்ரோ போன்ற பிரதான சில்லறை விற்பனை நிறுவனங்களும் இந்த விற் பனை விழாவில் பங்கேற்று தனது பொருட்களை 90 விழுக்காடு விலைக்கழிவு வரை விற்று வருகின்றன.
இந்த ஆண்டு விற்பனை விழாவில் சில்லறை விற்பனை துறையில் 60 ஆண்டு அனுபவம் பெற்றுள்ள மெட்ரோ ஹோல் டிங்ஸ் நிறுவனம் ‘லஸாடா சிங்கப்பூர்’ நிறுவனத் துடன் இணைந்து பொருட்களைப் பெரும் விலைக் கழிவில் விற்கும் என்று நேற்று முன்தினம் தெரிவித்தார் மெட்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவிட் டேங்.