புக்கிட் பாத்தோக்கில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து வாகனங்கள் சிக்கிக்கொண் டன. அதில் காயமுற்ற சிற்றுந்தின் ஓட்டுநரும் பயணி ஒருவரும் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
பிரிக்லேண்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5ல் நிகழ்ந்த விபத்து பற்றி தங்களுக்கு புதன்கிழமை காலை 7.41 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. இவ்விபத்தில் இரு லாரிகள், இரு கார்கள், ஒரு சிற்றுந்து ஆகியவை சம்பந்தப் பட்டிருந்தன.
சிற்றுந்தின் ஓட்டுநரான 57 வயது ஆடவரும் அவரது பயணியான 67 வயது ஆடவரும் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்த விசாரணை நடைபெறுகிறது.